
கஜினி, வீரம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் பிரதீப் ராவத் தனது 74-வது வயதில் காலமானார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தொட்டி ஜெயா படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், இந்தியில் மகாபாரத் தொடரில் அஸ்வத்தாமா கதாபாத்திரத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.