
இயக்குநர் வெற்றிமாறன் தனது 51-வது பிறந்தநாளைக் கொண்டாடியபோது, வாளைப் பயன்படுத்தி கேக் வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொண்டாட்டத்தில் திரையுலகினர் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்ட நிலையில், வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் வாள் பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வெற்றிமாறன் தற்போது சிம்பு நடிக்கும் 'அரசன்' மற்றும் 'ராஜன் வகையறா' ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.