
டாடா, இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்சிஎல் உள்ளிட்ட 8 முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறையை அமெரிக்கா முடக்கியுள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் முறைகேடுகளைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார்.
புதிதாக அளிக்கும் விண்ணப்பங்களை ஏற்க மாட்டோம் என்றும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை பரிசீலிக்க மாட்டோம் என்றும் தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.