
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு உடனடியாக 50 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தியைச் சேமிக்கும் நோக்கில், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.