நடிகர் அஜித்குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' ஆவணப்படத்தின் டிரெய்லர் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் தனது படைப்புகளைக் கொண்டு செல்வேன் என அஜித் உறுதியளித்துள்ள நிலையில், இந்த ஆவணப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த ஆவணப்படம், அஜித்தின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.