
இந்தியாவை விளையாட்டு வல்லரசாக மாற்றும் நோக்கில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு கேலோ இந்தியா திட்டத்திற்கு ரூ.29,054 கோடியும், கூட்டமைப்புகளுக்கு ரூ.7,387 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2030-ல் ஆமதாபாத்தில் காமன்வெல்த் போட்டிகளையும், 2036-ல் ஒலிம்பிக் போட்டிகளையும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் கேலோ இந்தியா பீடர் பள்ளிகள் மூலம் இளம் வயதிலேயே திறமையான வீரர்களைக் கண்டறிந்து ஒலிம்பிக் பதக்கங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.