
2026-27 முதல் 2030-31 வரையிலான காலத்திற்கு ரூ.36,441 கோடி நிதி ஒதுக்கீட்டில் கேலோ இந்தியா திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
முன்பு 3,000 வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட உதவித்தொகை, இனி 30,000 வீரர்களுக்கு வழங்கப்படும் என இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
பயிற்சியாளர்களை மேம்படுத்த ரூ.748 கோடி ஒதுக்கப்பட்டு, தேசிய பயிற்சியாளர் அங்கீகார வாரியம் மூலம் முன்னாள் சாம்பியன் வீரர்கள் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.