
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா சென்றால் பெங்களூரு விமான நிலையத்தில் முற்றுகையிடுவோம் என கன்னட சலுவாலி வாட்டாள் பக்ஷா கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு 3,500 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 13 அன்று கர்நாடகாவில் பந்த் நடத்த 1,600-க்கும் மேற்பட்ட அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், திட்டமிட்ட தேதியில் கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் ஏற்கனவே தமிழக முதல்வரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.