இலங்கையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாமல், டெங்கு தடுப்பூசி இதுவரை அறிமுகப்படுத்தப்படாமல் இருப்பது குறித்து மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் இந்தத் தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்குவதில் தொடர்ச்சியான தாமதம் ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஒன்றின் விலை சுமார் 50,000 ரூபாவாக உள்ளதால், அடுத்த டெங்கு பரவல் அலைக்கு முன்பு பொதுமக்கள் இதனைப் பெற்றுக்கொள்ள அனுமதி நடைமுறைகளை உடனடியாக விரைவுபடுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.