
தமிழ்நாட்டில் உள்ள 4,048 மதுக்கடைகளில், நகரப்பகுதிகளில் உள்ள சுமார் 2,500 கடைகளைத் தனியார்மயமாக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான செய்திகளுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2002-03-ம் ஆண்டில் தனியார் மதுக்கடைகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் கள்ளச்சாராய விற்பனை காரணமாகவே அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்டன என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார்மயமாக்கல் முடிவைக் கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.