
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதன் மூலம் தனது 168-வது டெஸ்ட் போட்டியை எட்டியுள்ளார்.
இதன் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோரின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ள நிலையில், அவரை நெருங்க ஜோ ரூட்டிற்கு இன்னும் 32 போட்டிகள் தேவைப்படுகின்றன.