
புக்கெட்-புதுடெல்லி ஏர் இந்தியா விமானம் நடுவானில் 300 அடி திடீரென சரிந்ததில் 137 பயணிகளில் 20 பேரும், 4 பணியாளர்களும் காயமடைந்தனர்.
விமானத்தை இயக்கிய முதன்மை பைலட் கஞ்சா பயன்படுத்தியது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் இருக்கையில் இல்லாதபோது இணை பைலட் விமானத்தை தரையிறக்கினார்.
விபத்து குறித்து விமான போக்குவரத்து துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், காயமடைந்த பணியாளர்களுக்கு எலும்பு முறிவு மற்றும் தண்டுவடக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.