
மக்களவையில் வரி விதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 நிறைவேற்றப்பட்டதன் மூலம், இனி யுபிஐ மற்றும் ரூபே கார்டு பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணம் காய்கறி, பால் வாங்குவது போன்ற அன்றாடச் செலவுகளுக்குப் பொருந்தாது என்றும், பெரிய வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மசோதாவின் கீழ் மின்னணு உற்பத்தி ஆலைகளை அமைக்க வரிச் சலுகைகள் வழங்கப்படுவதால், இந்தியா உலகின் மின்னணு உற்பத்தி சந்தையாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.