
பொருளாதார நெருக்கடி காரணமாக, மாதத்திற்கு 110 லிட்டருக்கு மேல் பெட்ரோல் வாங்குபவர்களுக்கான விலையை ஈரான் அரசு இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது.
புதிய நடைமுறைப்படி, ஒதுக்கீட்டிற்கு மேல் வாங்குபவர்கள் ஒரு லிட்டருக்கு 100,000 ரியால்கள் செலுத்த வேண்டும், இது டிசம்பர் விலையை விட இரு மடங்கு அதிகம்.
ஈரானின் நாணய மதிப்பு சரிந்து ஒரு அமெரிக்க டாலர் 2.22 மில்லியன் ரியால்களாக உள்ள நிலையில், இந்த விலை உயர்வு 15 சதவீத நுகர்வோரை பாதிக்கும் என அந்நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.