
நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் எலீனா ரைபகினா மற்றும் கோகோ காஃப் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
ரைபகினா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஜெஸ்ஸிகாவை வீழ்த்திய நிலையில், கோகோ காஃப் 6-4, 7-6 என்ற கணக்கில் பவுலா படோசாவை தோற்கடித்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் அலெக்சாண்டர் ஜிவரேவ் 5 செட் போராட்டத்திற்குப் பிறகு பிரான்ஸ் வீரர் குவென்டின் ஹாலிஸை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.