
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க இடைக்காலக் குழுவை அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தங்களின் நிர்வாக உரிமையில் தலையிடுவதாகக் கூறி பொது தீட்சிதர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் குழு, இடைக்காலத் தடை விதித்ததையடுத்து பொது தீட்சிதர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.