
மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவுடன்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடப்பதாக அவர் கூறினார்.
கடந்த ஐந்து மாதங்களில் 500 கொலைகள் நடந்துள்ளதாகவும், வண்டலூரில் பள்ளி மாணவிக்கு வன்கொடுமை நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.