
கரூரில் கடந்த 2025 செப்டம்பர் 27-ம் தேதி நடந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணைகளை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது.
உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு கடந்த 10-ம் தேதி முதல்வர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கிய நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வு மற்றும் தகுதி அடிப்படையில் மட்டுமே அரசுப் பணி வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த பணி நியமனங்கள் விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.