
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக் கோரி நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது பிடிஐ கட்சியின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
2023 ஆகஸ்ட் 5-ம் தேதி கைது செய்யப்பட்ட இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இம்ரான் கானை விடுவிக்க சட்ட ரீதியான வழிகள் பலனளிக்கவில்லை என்றால், செப்டம்பர் 27-ம் தேதி இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்தப்படும் என கைபர் பக்துன்க்வா முதல்வர் அறிவித்துள்ளார்.