
சென்னையில் உள்ள நடிகர் தனுஷின் இல்லத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில முக்கிய நிர்வாகி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசியுள்ளார்.
விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், தனுஷும் ரசிகர் மன்றப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதால் இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது வழக்கமான சந்திப்புதான் என்றும், இதற்குப் பின்னால் எந்த அரசியல் பின்னணியும் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.