
அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் மற்றும் தலையீடுகள் தொடரும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க முடியாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே நடக்கும் நிலையில், இது ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்நாட்டுப் பாதுகாப்புப் படை கூறியுள்ளது.
அமெரிக்காவிற்கு உதவும் நாடுகள் தங்கள் நடத்தையைத் திருத்திக் கொள்ளாவிட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.