
அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 7-ஆம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதுடன், அக்டோபர் 10-ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.