
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 33 மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்குத் தேர்வாகியுள்ளனர்.
இதில் 30 பேர் எம்.பி.பி.எஸ் படிப்பிலும், 3 பேர் பல் மருத்துவப் படிப்பிலும் சேர வாய்ப்பு பெற்றுள்ளனர்.
கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பயனடைந்துள்ளனர்.