
திமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தி, மா.செக்களுக்கான அதிகபட்ச வயது வரம்பை 70 ஆக நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு அமைக்கப்பட்ட 38 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவின் அறிக்கை மற்றும் இணையதளம் மூலம் பெறப்பட்ட பல்லாயிரக்கணக்கான கருத்துகளின் அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
தங்கம் தென்னரசு தலைமையிலான மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைப்படி, இனி வரும் காலங்களில் நியமனங்களுக்குப் பதிலாக உட்கட்சித் தேர்தல் மூலம் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.