
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா 6-1, 6-4 என்ற நேர்செட்டில் நவோமி ஒசாகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ரைபகினா, இந்த வெற்றியை வெறும் 66 நிமிடங்களில் பதிவு செய்து தனது முதல் அமெரிக்க ஓபன் காலிறுதியை எட்டியுள்ளார்.
இந்தத் தொடரில் இன்னும் ஒரு வெற்றி பெற்றால், தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு ரைபகினாவுக்கு உள்ளது.