
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று பாராட்டியுள்ளார்.
1997 முதல் 2011 வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய அக்தர், டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
விராட் கோலி போன்ற தற்போதைய வீரர்களைப் பலரும் கொண்டாடினாலும், சச்சினின் பேட்டிங் திறமைக்கு தான் என்றும் தீவிர ரசிகன் என்று அக்தர் கூறியுள்ளார்.