/nakkheeran/media/media_files/2026/09/21/dengue-meeting-cm-vijay-2026-09-21-16-35-13.jpg)
வடகிழக்குப் பருவமழை மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது.
கொசுப்புழு ஒழிப்புப் பணிகள், வீடுதோறும் கள ஆய்வு, மருத்துவ ஆலோசனை மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் மு. சாய் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.