
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா காயம் காரணமாக விலகியதால் இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் பிளவியோ கோபோலி 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டாமி பாலை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
மற்றொரு காலிறுதியில் ஆர்துர் பில்ஸ் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் தியாகோ அகஸ்டினை வீழ்த்தி அரையிறுதியில் கோபோலியை எதிர்கொள்கிறார்.