/nakkheeran/media/media_files/2026/09/29/nd-2026-09-29-15-49-34.jpg)
இத்தாலியின் இண்டேசா சான் பாவ்லா வங்கியின் ஒரு பிரிவான ஃபிடியூரம் வங்கியில், ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரூ.1034 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கித் தலைவருக்கு தலைமை செயல் அதிகாரியின் வாட்ஸ்அப் கணக்கிலிருந்து வந்த செய்தியையும், வழக்கறிஞர் ஒருவரின் தொலைபேசி அழைப்பையும் உண்மை என நம்பி அவர் பணப் பரிவர்த்தனை செய்துள்ளார்.
பல கட்டங்களாக மொத்தம் 9.5 கோடி யூரோ (ரூ.1034 கோடி) வெளிநாட்டு வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட பிறகு, அது ஏ.ஐ மூலம் நடத்தப்பட்ட மோசடி என தெரியவந்துள்ளது.