
திபெத்-நேபாள எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நிலைமையை ஆய்வு செய்ய சீன அதிபர் ஜி ஜின்பிங் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த பேரிடரில் திபெத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் திபெத்தில் 550 பேரும், நேபாளத்தில் 100 சீனர்களும் மாயமாகியுள்ளதாக சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 555 சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 1,000 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை முடுக்கிவிட சீன அரசு முடிவு செய்துள்ளது.