நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 20 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் நீட் விலக்கு குறித்து பிரசாரம் செய்யப்பட உள்ளது.
செப்டம்பர் 1-ம் தேதி அனிதா நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் 10 மையங்களில் பேரணி மற்றும் கருத்தரங்குகளை நடத்த சங்கம் திட்டமிட்டுள்ளது.