
இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர் திட்டம் 2026, ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், வங்கிச் சேவை குறைபாடுகளுக்கான இழப்பீட்டு வரம்பு ₹20 லட்சத்திலிருந்து ₹30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மன உளைச்சல் மற்றும் கால விரயத்திற்காக வழங்கப்படும் இழப்பீடு ₹1 லட்சத்திலிருந்து ₹3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் இனி புகார் அளிக்க முடியும்.
வங்கி 30 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றாலோ அல்லது தீர்வு திருப்திகரமாக இல்லை என்றாலோ மட்டுமே வாடிக்கையாளர்கள் குறைதீர் அதிகாரியை அணுக வேண்டும் என்று புதிய விதிமுறைகள் தெரிவிக்கின்றன.