
கேப் வெர்டே நாட்டின் பகொ தீவில் பள்ளிக்குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 25 பேர் உயிரிழந்தனர்.
சுற்றுலா சென்ற 32 பேரில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மலைப்பாங்கான பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.