
2026-ல் முதல்வராகும் விஜய்யை, 2029-ல் ராகுல் காந்தி கையைப் பிடித்து பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார் என்று தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏவான கனிமொழி, 2029-ல் இந்திய அரசியலில் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான மாற்றம் ஏற்படும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத்தலைவர் தாரகை கத்பர்ட், ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்பதில் முதல்வர் விஜய்யே தெளிவாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.