
இயக்குநர் ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன் மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘டைட்டானிக்’ படம் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகும் என இயக்குநர் அறிவித்துள்ளார்.
திருக்குமரன் என்டர்டெயிண்ட்மென்ட் சார்பாக சிவி குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
குறைவான திரைகள் கிடைத்த காரணத்தினாலும், பல தடைகளைத் தாங்கியும் இப்படம் இன்று வெளியாகவிருந்து பின்னர் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.