
ஜூன் மாதம் முதல் தற்போது வரை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 80.451 டி.எம்.சி நீரில், 25.598 டி.எம்.சி மட்டுமே கிடைத்துள்ளதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீரான 17.604 டி.எம்.சி-யை கர்நாடகம் உடனடியாக திறக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் 9,000 கன அடி நீரை 15 நாட்களுக்கு திறக்க உத்தரவிட்டும், கர்நாடக அரசு அதைச் செயல்படுத்தவில்லை என்று தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.