
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ரஞ்சி கோப்பை டி பிரிவு லீக் போட்டியில் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 66 ரன் வித்தியாசத்தில் உத்தரகாண்ட் அணியை வீழ்த்தியது.
தமிழக அணியின் கேப்டன் சாய் கிஷோர் இரண்டாவது இன்னிங்சில் ஹட்ரிக் விக்கெட் உட்பட மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் போனஸ் புள்ளியுடன் சேர்த்து தமிழக அணி 7 புள்ளிகளைப் பெற்றது.