
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில், செயின்ட் லூசியா கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணி வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த செயின்ட் லூசியா அணி 20 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்த நிலையில், பார்படோஸ் வீரர் முஜிபுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
139 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பார்படோஸ் அணி, குவிண்டன் டிகாக் அடித்த 47 ரன்களின் உதவியுடன் 17.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.