
2030 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 64 ஆக உயர்த்த பிஃபா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்த இறுதி முடிவு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த உலகக்கோப்பை ஸ்பெயின், மொராக்கோ மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள நிலையில், தொடக்க விழா அர்ஜென்டினா, பராகுவே, உருகுவேயில் நடக்கவுள்ளது.