
துலீப் டிராபி தொடரில் தெற்கு மண்டல அணியின் கேப்டனாகச் செயல்படும் 23 வயதான திலக் வர்மா, வடக்கு மண்டலத்திற்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 116 ரன்கள் எடுத்து சதமடித்தார்.
திலக் வர்மா தனது இரண்டாவது இன்னிங்சில் 51 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியதுடன், தெற்கு மண்டலத்தை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறச் செய்தார்.
இதுவரை 59 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள திலக் வர்மா, தனது பலம் டெஸ்ட் கிரிக்கெட் தான் என்றும், இந்திய டெஸ்ட் அணியில் விளையாட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.