
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 45-வது ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜூன் 1 முதல் ஜூலை 19 வரை பிலிகுண்டுலுவில் 3.422 டிஎம்சி நீர் மட்டுமே வந்ததாக தமிழக அரசு முறையிட்ட நிலையில், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஆணையம் ஏற்றுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து பெங்களூரு, மாண்டியா, மங்களூரு உள்ளிட்ட தென்கர்நாடக மாவட்டங்களில் நாளை ஜூலை 31-ம் தேதி கர்நாடக வேளாண் சங்கங்கள் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.