
ஜப்பானின் அய்ச்சி – நகோயாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் வெற்றி பெற்றுள்ளார்.
பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் 3–0 (11–6, 11–3, 11–6) என்ற கணக்கில் குவைத்தின் அஹத் அல்ரஷீதியை தோற்கடித்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் பேபி சஹானா மற்றும் சுபம் வாத்வா உள்ளிட்ட பலரும் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.