
கொழும்பில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் முதல் நாளில், இலங்கை பிரதமர் லெவன் அணி 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்தது.
இலங்கை அணியின் ரவிந்து ரசந்தா 71 ரன்களும், நிஷந்தா பெர்னாண்டோ 66 ரன்களும், கேப்டன் சோனல் தினுஷா 52 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் மானவ் சுதார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.