கனடாவின் டொராண்டோவில் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி ஹிமான்ஷி குரானா (30) என்ற இந்திய வம்சாவளி பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலன் அப்துல் கபூரி 7 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை நடந்தவுடன் தலைமறைவான அப்துல் கபூரியை சர்வதேச காவல் அமைப்புகளின் உதவியுடன் டொராண்டோ போலீசார் கைது செய்து கனடாவுக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த வழக்கில் அப்துல் கபூரி மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் எந்த நாட்டில் பதுங்கியிருந்தார் என்ற விவரத்தை வெளியிடாமல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.