
சீனாவின் ஹாங்சு நகரில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சோனம்-ஹிமான்ஷு ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.
தகுதிச்சுற்றில் 634.6 புள்ளிகள் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சோனம்-ஹிமான்ஷு ஜோடி, பைனலில் 441.2 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.