
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் வாழும் தகுதியுள்ள நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 30,000 தகுதிவாய்ந்த நபர்களுக்கு 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் நடப்பு 2026-27ஆம் நிதி ஆண்டிற்கு ரூ.109.75 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு ஆணையிட்டுள்ளது.