
குவைத், பஹ்ரைன், கத்தார், யுஏஇ, சவுதி அரேபியா, ஈராக், ஓமன் மற்றும் ஜோர்டான் ஆகிய 8 நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் ஈரான் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள், எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் மற்றும் 12-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த பாதிப்புகளைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் தங்கள் ராணுவ தளங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது அல்லது இடத்தை மாற்றி அமைப்பது குறித்து பென்டகன் ஆலோசித்து வருகிறது.