
நிர்வாகிகள் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாதது மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தால் இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுப்பிய நோட்டீசுக்கு சம்மேளனம் அளித்த பதில் திருப்திகரமாக இல்லாததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்மேளனத்தின் அன்றாட பணிகளை கவனிக்க இடைக்கால கமிட்டியை அமைக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்தை விளையாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.