
சென்னையில் உள்ள வீட்டில் இருந்த காசோலைகளை திருடி, நடிகை அம்பிகா மற்றும் அவரது தம்பி மல்லிகார்ஜூன் குஞ்சன் நாயர் ஆகியோர் 46 கோடி ரூபாய் மோசடி செய்ய முயற்சி செய்ததாக நடிகை ராதா போலீசில் புகார் அளித்துள்ளார்.
ராதா தனது வங்கி கணக்கில் இருந்து அம்பிகா வங்கி கணக்கிற்கு பணம் எடுக்க முயற்சி செய்யப்பட்டதை குறுஞ்செய்தி மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
ராதா, தனது அக்கா அம்பிகா மற்றும் தம்பி மல்லிகார்ஜூன் ஆகியோர் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபட முயற்சி செய்ததாகக் கூறியுள்ளார்.