தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 லீக் தொடரில் ஜோகானஸ்பேர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதிலிருந்து ஆல்ரவுண்டர் கெய்ரன் பொல்லார்டு விலகியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே இந்த விலகல் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக பல்வேறு பொறுப்புகளை கவனிக்க வேண்டியுள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.